

தேனி :
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் விஸ்வரூபன் (வயது 11). மஞ்சளாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று அவன் தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி விஸ்வரூபனை முட்டி தள்ளியது.
இதில் படுகாயமடைந்த விஸ்வரூபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.