குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை

குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை
Published on

பூந்தமல்லி,

குன்றத்தூர் சிவன் கோவில் சந்து தச்சர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு ஆண்டுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார்.

பின்னர் அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லை என்று அவரை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சதீஷ்குமாரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்த சதீஷ்குமார் நேற்று முன் தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com