

பெரம்பூர்,
வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி.நகர் 17வது மத்திய நிழல்சாலையை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 34). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 20ந் தேதி ஜான்பீட்டர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.
நேற்று காலையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜான்பீட்டர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி
வருகின்றனர்.