

நெல்லை:
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் ஜான்சிராணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 36). பட்டாசு ஆலை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிதுநேரம் கழித்து தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.1,000 திருட்டு போனது தெரிய வந்தது. சுடலைமுத்துவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிக்கு போலீசார் ரோந்து பணிக்கு வருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவுப்படி, பட்டா புத்தகம் போட்டு போலீசார் ரோந்து பணிக்கு செல்வதை உறுதி செய்துள்ளனர்.