

வீட்டின் பூட்டு உடைப்பு
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் சின்னமஞ்சாகுப்பம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). விவசாயி. இவருக்கு மாரியம்மாள் (38) என்ற மனைவியும், பவித்ரா (25) என்ற மகளும், ரஞ்சித் (23) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் முருகனின் மகன் மற்றும் மகள் ஆகியோர் வேலையின் காரணமாக வெளியே சென்றுவிட்டனர்.
முருகன் தனனுடைய மனைவியுடன் அருகில் உள்ள வயலில் வேலைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மதியம் அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை- பணம் திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வளையல், மோதிரம் என 24 பவுன் தங்க நகைகளும், ரொக்கப்பணம் ரூ.4 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முருகன் இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.