

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் மடம் உள்ளது. இதை லூமினா (வயது 54) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனைவரும் அந்த மடத்தை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். நேற்று வந்து பார்த்தபோது அந்த மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த லூமினா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.