குளத்தை பொலிவுப்படுத்த ரூ.6½ கோடியில் திட்டம் பொதுப்பணித்துறையினர் தகவல்

‘பழனி வையாபுரிகுளத்தைபொலிவுப்படுத்த ரூ.6½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது‘ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளத்தை பொலிவுப்படுத்த ரூ.6½ கோடியில் திட்டம் பொதுப்பணித்துறையினர் தகவல்
Published on

பழனி,

பழனி நகரின் மையப்பகுதியில் வையாபுரிகுளம் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்து தண்ணீர் புண்ணிய தீர்த்தமாக கருதப்பட்டது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த குளத்தில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் கரைகள் சேதம் அடைந்தன. மேலும் குளம் முழுவதும் அமலைச்செடிகள் படர்ந்து வளர்ந்தன. இதைத்தவிர ஓட்டல், மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுகின்றன. குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் தேங்குகின்றன.

தற்போது வையாப்புரிகுளம் தனது புனித தன்மையை இழந்து காணப்படுகிறது. தண்ணீர் இன்றி கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. குட்டை போல காட்சி அளிக்கும் குளத்தில் பக்தர்கள் நீராடுவதில்லை.

இந்தநிலையில் வையாபுரி குளத்தை பொலிவுப்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது.

பழனி வையாபுரிகுளத்தைபொலிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குளத்தில் உள்ள அமலைச்செடிகளை அகற்றி தூர்வாரும் பணியை மேற்கொள்ள இருக் கிறோம். குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, கரைப்பகுதியில் கொட்டி பலப்படுத்தப்பட உள்ளது. குளத்தை சுற்றிலும் வாகனங்கள் செல்லும் அளவுக்கு பாதை அமைக்கப்படுகிறது.

குளத்தில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து, குளத்துக்குள்ளேயே விடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். குளத்துக்குள் வெளிநபர்கள் நுழைவதை தடுக்க, தடுப்பு சுவர்களை அமைத்து காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளும் வகையில் ரூ.6 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாத்துறை மூலம் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்து விட்டனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com