பி.எஸ்.என்.எல். அனைத்து சங்கங்கள் சார்பில் தர்ணா

துணை டவர் நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
பி.எஸ்.என்.எல். அனைத்து சங்கங்கள் சார்பில் தர்ணா
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தேவராஜ், என்.எப்.டி.இ. தலைவர் சுந்தரம், டி.இ.பி.யூ. உதவி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள 66 ஆயிரத்து 800 டவர்களை பிரித்து துணை டவர் நிறுவனத்தை தொடங்குவது என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், துணை டவர் நிறுவனத்திற்கு என தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து இருப்பதை கண்டித்தும் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணாவை அகில இந்திய துணை தலைவர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்த அஸ்லம் பாஷா, ரவீந்திரன், காமராஜ், சசிக்குமார் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி தமிழக கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்வது, மே 9 மற்றும் 10-ந்தேதிகளில் டெல்லியில் தேசிய கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com