பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி; தயாநிதிமாறன் எம்.பி குற்றச்சாட்டு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி சய்து வருகிறது என தயாநிதிமாறன் எம்.பி குற்றம் சாட்டி உள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுவினரை தயாரித்த கயிறு பொருட்களை தயாநிதிமாறன எம்.பி. பார்வையிட்ட போது
மகளிர் சுய உதவிக்குழுவினரை தயாரித்த கயிறு பொருட்களை தயாநிதிமாறன எம்.பி. பார்வையிட்ட போது
Published on

பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே தென்பரை கிராமத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் எம்.பி பிரசாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.,, கோட்டூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர். தேவதாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட துணை செயலாளர் கலைவாணி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி

திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் கிராமத்தில் தயாநிதி மாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் மத்திய மோடி அரசுக்கு எதிராக டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்கிறார். இது முற்றிலும் மக்களின் வரிப்பணம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயத்திற்கு எதிராக உள்ள அனைத்து பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் வல்லூர் கிராமத்தில் கயிறு தொழிற்சாலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டு வருகின்ற கயிறு தொடர்பான தொழில் குறித்து தயாநிதி மாறன் பார்வையிட்டு அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மரக்கன்று நட்டார்

நீடாமங்கலம் ஒன்றியம் எடமேலையூர் கிராமத்திற்கு தயாநிதிமாறன் எம்.பி. நேற்று வருகை தந்தார்.பின்னர் அவர், முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு இல்லத்திற்கு சென்று அங்கு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் மரக்கன்றையும் நட்டு வத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com