குண்டும்,குழியுமான ரெயில்வே சுரங்கப்பாதை

குண்டும்,குழியுமான ரெயில்வே சுரங்கப்பாதை
குண்டும்,குழியுமான ரெயில்வே சுரங்கப்பாதை
Published on

உடுமலை காந்தி சதுக்கத்தில் உள்ளரெயில்வே சுரங்கப்பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரெயில்வே சுரங்கப்பாதை

உடுமலை தளி சாலையில் நகராட்சி பகுதியில் உள்ள காந்தி சதுக்கத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.இந்த சுரங்கப்பாதை வழியாக வேன்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின்போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதையில் தளம் சேதமடைந்துள்ளது.

சீரமைக்க கோரிக்கை

அதனால் இந்த சுரங்கப்பாதையின் நடுப்பகுதியில், பாதிக்குமேற்பட்ட பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ள இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். நடந்து செல்கிறவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதனால் குண்டும், குழியுமாக உள்ள இந்த ரெயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com