மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருநங்கைகளுக்கு கொரோனா உதவித்தொகை

சென்னை தியாகராயநகர் சர் பிட்டி தியாகராயநகரில் நேற்று நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருநங்கைகளுக்கு கொரோனா உதவித்தொகை
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கொரோனா உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராயநகர் சர் பிட்டி தியாகராயநகரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கொரோனா உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூகநல இயக்குனர் ரத்னா, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா மற்றும் அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com