சென்னை மாநகராட்சிக்கு கேபிள் டி.வி., இணையதள நிறுவனங்கள் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு கேபிள் டி.வி., இணையதள நிறுவனங்கள் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி., இணையதள வசதிகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் மின்துறை மூலமாக தெருவிளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமில்லாத மற்றும் வாடகை செலுத்தாத கேபிள் டிவி, இணையதள நிறுவனங்களின் 74.60 கி.மீ. நீளமுள்ள வயர்கள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், 59.91 கி.மீ. நீளமுள்ள வயர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாத நிறுவனத்தின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவே, கேபிள் டி.வி., இணையதள சேவை நிறுவனங்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com