கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி வேலை

கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட கால பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவார்கள்.
கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி வேலை
Published on

பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. தற்போது இந்த வங்கியில், பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல் 1) தரத்திலான இந்த பணிகளுக்கு மொத்தம் 450 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 227 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 121 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 67 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 35 இடங்களும் உள்ளன.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு-நேர் காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பெங்களூருவில் உள்ள மணிப்பால் குளோபல் எஜூகேசன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை வங்கிப் பணிகளுக்கான டிப்ளமோ பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். ஒரு ஆண்டு பயிற்சிக்குப் பின் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படுவதுடன், புரபெசனரி அதிகாரியாக பணி நியமனமும் பெறலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:


ஆன்லைன் ஆப்ஜெக்டிவ் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மணிப்பால் வங்கிப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118-ம், மற்றவர்கள் ரூ.708-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.Canarabank.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-1-2018 அன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 15-2-2018-ந் தேதி வரை விண்ணப்பத்தை பிரிண்ட் செய்யலாம். தேர்வுக்கான அழைப்புக்கடிதம் 20-2-2018-க்குப் பிறகு பதிவிறக்கம் செய்யலாம். 4-3-2018 அன்று இதற் கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com