சரியான நேரத்திற்கு வராததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே சரியான நேரத்திற்கு வராததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான நேரத்திற்கு வராததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
Published on

திருவொற்றியூர்,

பொன்னேரி அருகே உள்ளது பனப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்திற்கு பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து டி36 வழித்தடம் எண் கொண்ட அரசு பஸ் ஆவூர், எடக்குப்பம், இலுப்பாக்கம், குமரஞ்சேரி, பனப்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த அரசு பஸ் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது தேர்வு நடந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு வரவேண்டிய அரசு பஸ் காலதாமதமாக வந்தது. இந்த வழித்தடத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஒன்று கூடினர். காலதாமதமாக வந்த பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரியான நேரத்திற்கு அரசு பஸ் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை மீட்டனர். பின்னர் பொதுமக்கள், மாணவர்கள் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com