மின் திருட்டு குறித்து தகவல் கொடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு

கடந்த 3 ஆண்டுகளில் மின் திருட்டு குறித்து தகவல் கொடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க மாநில மின் வினியோக நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மின் திருட்டு குறித்து தகவல் கொடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு
Published on

நாக்பூர்,

மராட்டியத்தின் பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக மின் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக மின் வினியோக நிறுவனத்துக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மின் வினியோக நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி மின் திருட்டு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து, மாநில மின் வினியோக நிறுவனத்திற்கு மின் திருட்டு குறித்த தகவல்கள் வந்து குவிந்தன.

இந்த தகவல்களின் பேரில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து மின் வினியோக நிறுவனம் கட்டணமாகவும், அபராதமாகவும் ரூ.4 கோடியே 10 லட்சம் வரை வசூலித்தது.

இதில் 10 சதவீதமான ரூ.41 லட்சத்தை மின் திருட்டு குறித்து தகவல் கொடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசாக வழங்க மாநில மின் வினியோக நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com