பஸ்நிலையத்தை ஆக்கிரமித்துள்ள கால்நடைகள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பஸ்நிலையத்தை கால் நடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
பஸ்நிலையத்தை ஆக்கிரமித்துள்ள கால்நடைகள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on

கீழக்கரை,

கீழக்கரை பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்காமல், அதன் உரிமையாளர்கள் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். மேலும் கால்நடைகளை பாதுகாக்காமல் வெளியில் விடுவதால் அவை தெருக்களில் சுற்றி திரிவதோடு, சாணம் போட்டு அசுத்தம் செய்கின்றன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

இதற்கும் மேலாக மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் கீழக்கரை பஸ்நிலையத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் வீதிகளிலும் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.

முந்தைய காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இதை யாரும் கண்டு கொள்ளாததால் கால்நடைகள் அனைத்தும் சாலைகளில் சுதந்திரமாக படுத்துக் கிடப்பதும், சுற்றித் திரிவதும் சர்வசாதாரணமாக உள்ளது.

எனவே பஸ்நிலையம், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com