

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி பிரையண்ட்நகர் 10-வது தெரு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற அண்ணாநகரை சேர்ந்த கண்ணன் என்ற வள்ளியூரான் கண்ணன் (வயது 40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அந்த பகுதியில் வந்த ஒருவரை வழிமறித்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் என்ற வள்ளியூரான் கண்ணனை கைது செய்தனர். பிரபல ரவுடியான, அவர் மீது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.