தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் 11 பேருக்கு மத்திய அரசு விருது

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் 11 பேருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் 11 பேருக்கு மத்திய அரசு விருது
Published on

தஞ்சாவூர்,

காவல் துறையில் சிறந்த பணிக்கான விருது மற்றும் அதிசிறந்த பணிக்கான விருது பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. இதில், சிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் 166 போலீஸ் அதிகாரிகளும், போலீஸ்காரர்களும், அதிசிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் 108 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில், அதிசிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கடலோர பாதுகாப்புப்படையின் பட்டுக்கோட்டை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், எஸ்.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் (தஞ்சை மாநகரம்), பி. துரைமாணிக்கம் (ஒரத்தநாடு), தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் தஞ்சை மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.பி.சி.ஐ.டி. ஏட்டு மணிவண்ணன் (திருவிடைமருதூர்), நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவு போலீஸ் ஏட்டு சரஸ்வதி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் ஏட்டு முத்துகிருஷ்ணன், ஏட்டுகள் சரவணன் (தஞ்சை தெற்கு), ஆல்பர்ட் டென்னிஸ் (தஞ்சை மேற்கு), ராம்குமார் (ஆயுதப்படை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு விரைவில் விருது வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com