ஈரானில் தவிக்கும் 700 மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு வேகம் காட்ட வேண்டும் வசந்தகுமார் எம்.பி. பேட்டி

ஈரானில் தவிக்கும் 700 மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு வேகம் காட்ட வேண்டும் என மார்த்தாண்டத்தில் வசந்த குமார் எம்.பி. பேட்டி அளித்தார்.
ஈரானில் தவிக்கும் 700 மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு வேகம் காட்ட வேண்டும் வசந்தகுமார் எம்.பி. பேட்டி
Published on

குழித்துறை,

மார்த்தாண்டம் வடக்குத்தெருவில், வசந்தகுமார் எம்.பி.யின் குமரி மேற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. வசந்தகுமார் எம்.பி. தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்த பாகோட்டை சேர்ந்த விஜயகுமாரின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட பொருளாளர் சாமுவேல் ஜார்ஜ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர் லாரன்ஸ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், ஜெர்வின், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சேவாதளம் தலைவர் ஜோசப்தயாசிங், அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர், வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஈரானில் தவிக்கும் 700 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதில் மேலும் வேகம் காட்ட வேண்டும்.

புலிகள் சரணாலயம், சூழியல் தாங்கு அதிர்வு மண்டலம் ஆகியவற்றை சீரோ பாயிண்ட் பகுதியில் மட்டுமே செயல்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் எந்த பகுதியிலும் செயல்படுத்த கூடாது.

குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மத்திய அரசு அதை வாபஸ் பெற வேண்டியதுதானே. கமல், ரஜினியுடன் இணைந்து அரசியல் நடத்த போவதாக கூறுவதை நம்ப முடியாது.

இவ்வாறு வசந்த குமார் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com