

கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எட்டி மாணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி மாதேஸ்வரி (வயது 63). இவர் அதே ஊரில் உள்ள புது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை மர்ம நபர் பறித்துச்சென்று விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.