பண்ணை குட்டை அமைத்த பயனாளிகளுக்கு காசோலை

திருவாரூர் மாவட்டத்தில் பண்ணை குட்டை அமைத்த பயனாளிகளுக்கு காசோலையை, கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.
பண்ணை குட்டை அமைத்த பயனாளிகளுக்கு காசோலை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் குளிர் சாதனப்பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம், நாட்டுப்படகு எந்திரத்திற்கான மானியம், மீன்பாசி குத்தகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து பல்நோக்கு பண்ணைக்குட்டை அமைத்தமைக்காக 4 பயனாளிகளுக்கு தமிழக அரசின் 50 சதவீத மானியமாக தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான காசோலையையும், நல்லிக்கோட்டை அரசு மீன்குஞ்சு உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகளையும் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்துரு, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ரெங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com