சிதம்பரத்தில்: பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு

சிதம்பரத்தில் தேர்வு தோல்வி பயத்தால் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிதம்பரத்தில்: பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு
Published on

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் சத்தியநாராயணன்(வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வுகளில் சத்தியநாராயணன் தோல்வியடைந்து, அதிக பாடத்தில் அரியர்ஸ் வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனால் தற்போது நடைபெற்று வரும் தேர்விலும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் சத்தியநாராயணன் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சத்தியநாராயணன், வீட்டில் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சத்தியநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com