முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை; கோவில்பட்டி-கயத்தாறில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளைமறுநாள் முதல் 2 நாட்கள் பிரசாரம் மற்கொள்ளும், பங்கேற்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு பார்வையிட்டு ஆய்வு
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு பார்வையிட்டு ஆய்வு
Published on

முதல்-அமைச்சர் வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளைமறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக நாளைமறுநாள் காலையில் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து வில்லிசேரி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன் பொதுக்கூட்டத்தில்பங்கேற்று பேசுகிறார்.

போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

தொடர்ந்து, ஏ.கே.எஸ்.தியேட்டர் சாலை வழியாக நடந்து சென்று, அங்குள்ள காளியம்மன்கோவிலில் வழிபடஉள்ளார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள மகாலட்சுமி திருமணமண்டபத்தில் தொழில்வர்த்தக சங்கத்தினர் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இதேபோல், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல், விளாத்திகுளத்தில் மிளகாய் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், அவர் செல்லும் வழித்தடங்களை நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார்அபிநபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் வருகை தரும் போது, தேவையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்வன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com