பெண்கள் உதவி மையம் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறினார்.
பெண்கள் உதவி மையம் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேச்சு
Published on

கிருஷ்ணகிரி:

பெண்கள் உதவி மையம்

தமிழக காவல்துறையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், இளம் வயது திருமணத்தை தடுப்பதற்காகவும், குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண புதிதாக பெண்கள் உதவி மையம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டது.

இதற்கான பயிற்சி முகாம் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. பயிற்சி முகாமை போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பேசுகையில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்திற்காக தலா 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயன்பாட்டிற்காக மடிக்கணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இளம் வயது திருமணம் தொடர்பான தகவல்கள், பெண்கள் உதவி மையத்திற்கு வந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூடுதல் டி.ஜி.பி. சிறப்புரை

முன்னதாக நடந்த பயிற்சி முகாமில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி ஆகியோர் காணொலி மூலம் பேசினர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ நன்றி கூறினார்.

இதில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பாதுகாப்பு அலுவலர் தங்கமணி, தனியார் அமைப்பு நிர்வாகி சர்வகலா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர் கோபி, மகளிர் திட்ட உதவி அலுவலர் பிரபாகரன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன், மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலர் சரவணன் ஆகியோர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com