கோலார் தங்கவயலில், கல்லறை திருநாள் அனுசரிப்பு முன்னோர்களின் சமாதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

கோலார் தங்கவயலில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில், தங்களின் முன்னோர்களின் சமாதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோலார் தங்கவயலில், கல்லறை திருநாள் அனுசரிப்பு முன்னோர்களின் சமாதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு
Published on

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயலில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில், தங்களின் முன்னோர்களின் சமாதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 2-ந்தேதி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோலார் தங்கவயல் சாம்பியன் பகுதியில் உள்ள கல்லறையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் சமாதிகளை சுத்தப்படுத்தி, வர்ணம் பூசினர்.

இந்த நிலையில், நேற்று காலை முதலே ஏராளமான இந்துக்களும், கிறிஸ்தவர் களும் சாம்பியன் கல்லறை பகுதிக்கு வந்தனர். அவர்கள், கல்லறையில் தங்களின் முன்னோர்களின் சமாதியில் சைவ-அசைவ உணவு, மதுபானம் ஆகியவற்றை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த கல்லறை திருநாளில் லட்சக்கணக்கான இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். வெளியூரில் இருப்பவர்களும் சாம்பியன் கல்லறை பகுதிக்கு வந்ததால், சாம்பியன் கல்லறை நிரம்பி வழிந்தது.

பலத்த பாதுகாப்பு

சாம்பியன் கல்லறை பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களின் முன்னோருக்கு அஞ்சலி செலுத்தியதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.

இதேபோல, மாரிகுப்பம் பகுதியில் உள்ள ரோஜர்ஸ் கேம்ப் பகுதியிலும் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com