குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால், தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியை விட தற்போது கடன்சுமை நிச்சயமாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது என்ற அடிப்படை கூட தெரியாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமான அதிகரிப்புக்கு வழி தேடாமல் இல்லாத பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால் கடன்சுமைதான் அதிகரிக்கும். எதிர்காலத்தை பற்றி எந்தவித தெளிவான திட்டமிடல் இல்லாமல் பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர் நலனுக்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இது எல்லாம் தேவையே இல்லை. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் மசோதா நிறைவேறி இருக்காது. தமிழகத்தில் இந்த போராட்டங்கள் வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com