இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி 46 கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி 46 கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி 46 கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
Published on

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியான் ஆகிய இன மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட 7 இனத்து மக்களையும் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றாவிட்டால், தற்போது நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி உன்னங்குளம், இளையார்குளம், சேவகன்குளம், காக்கைகுளம், ஆயர்குளம், அரியகுளம், மேலநாச்சான்குளம், கடம்பன்குளம், எடுப்பல், கல்லத்தி, நெல்லையப்பபுரம், பெருமாள்நகர், சேர்ந்தான்குளம், பருத்திப்பாடு உள்பட 46 கிராமங்களில் நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com