கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேர் காணல் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்ப அரசால் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 140 அமைப்பாளர்கள் மற்றும் 471 சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முறையே மே மாதம் 9 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த பணி நியமனங்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது மற்றும் நேர்காணல் ஆகியவை பல்வேறு நிர்வாக காரணங்களினால் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இப்பணி நியமனங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிக்கை, பின்னர் தனியே வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com