தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வந்தார். திடீரென அவர், நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

இ-சேவை மையத்தில் முறையான தகவல்கள், சேவை கட்டணங்கள் குறித்த விவரங்களை விளம்பர பலகையாக வைக்கவும், ஆதார் கார்டு எடுக்கவரும் பொதுமக்கள் கொரோனா தொற்று பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும் இ-சேவை மையத்தில் நீண்டநேரமாக காத்திருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அமர நாற்காலிகள் அமைக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்க இ-சேவை மையத்தில் நீண்டகாலமாக பூட்டி இருந்த கிரில் கேட்டை திறக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். அத்துடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா மாதிரிகள் எடுக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது செங்கல்பட்டு மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, தாம்பரம் நகராட்சி கமிஷனர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com