வீரபாண்டி ஒன்றியத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

வீரபாண்டி ஒன்றியத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
வீரபாண்டி ஒன்றியத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
Published on

ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இனாம் பைரோஜி, வீரபாண்டி, அரசம்பாளையம், சென்னகிரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார். பைரோஜி, அரசம்பாளையம் ஆகிய இடங்களில் நுண்ணுயிர் பாசன திட்டத்தையும், சென்னகிரியில் அம்மா பூங்காவையும் பார்வையிட்டார்.

வீரபாண்டியில் பெண்கள் அவரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கலெக்டர் ரோகிணி கேட்டறிந்தார். வீரபாண்டி கலைஞர் காலனியில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட கட்டிடத்தையும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று பார்வையிட்டார். மேலும் வீரபாண்டி ஏரிக்கரை அருகே உள்ள நர்சரி கார்டனில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 4 விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்களை வழங்கினார். மண்புழு உரங்கள் உற்பத்தி செய்யும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலெக்டருடன் வட்டார பொறியாளர் அருள், சேலம் தெற்கு தாசில்தார் பத்மபிரியா, வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், உதவி பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com