வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக செயலி அறிமுகம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

வாக்காளர் சரிபார்க்கும் நிகழ்வு தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக செயலி அறிமுகம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
Published on

புதுக்கோட்டை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2020-ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் சரிபார்க்கும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய அனைத்து பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் சரிபார்க்கும் நிகழ்வு தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேகமாக Voters helpline App எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாக்காளர்கள் தங்களுடைய பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, வருமான வரிதுறையினரால் வழங்கப்படும் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து செயலியின் மூலம் தங்களது மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

மாறுதல்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்

இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலிகளான www.nvsp.in எனும் இணைய சேவை, Voter Helpline எனும் செயலி, பொது சேவை மையம், வாக்காளர் உதவி மையம், கட்டணமில்லா சேவை 1950 ஆகியவற்றின் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களினுடைய விவரங்களை சரிபார்ப்பதுடன், குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து தகவலினை பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் செய்ய வேண்டியவை உங்கள் புகைப்பட அடையாள அட்டையின் எண்ணை கொண்டு www.nvsp.in பதிவு செய்யுங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், உறவின் முறை பெயர், முகவரி மற்றும் புகைப்படத்தை சரிபார்க்கவும்.

பிழையிருப்பின் அல்லது உங்கள் விவரங்கள் மற்றும் புகைப்படம் மாற்றம் இருப்பின் சரியான தகவல்களை அளியுங்கள். அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை பதிவேற்றம் செய்யுங்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை மேற்காணும் செயலி மற்றும் இணையத்தின் மூலம் சரிபார்த்து, உரிய மாறுதல்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதேபோல மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் தாங்கள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை மேற்காணும் செயலி மற்றும் இணையத்தின் மூலம் சரிபார்த்து, உரிய மாறுதல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com