

இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விக்னேஷ் (23) என்பவருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள நீர்விழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.