கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

துவரங்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த மாதம் 29-ந்தேதி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனது சாவுக்கு காரணமான நபர் குறித்து அந்த மாணவி கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன் அந்தப் பெண் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.

பெண்களை வலையில் வீழ்த்திய வாலிபர்

இதையடுத்து வளநாடு போலீசார் அங்கு சென்று வாலிபரை பிடித்து, வளநாடு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட வாலிபர் சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களை கண்டறிந்து அவர்களிடம் நட்பாக பேசி செல்போன் எண்ணை பெற்று அதன் பின்னர் அவர்களை தன்வசப்படுத்தி வந்துள்ளார். அப்படி, தான் இந்த மாணவியிடமும் பேசி, புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். ஆனால் அனைத்து விவரங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அவர் மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது.

அனைத்தும் அழிப்பு

பின்னர் போலீசார் ராமராஜின் செல்போனை பார்த்த போது அதில் அனைத்து வீடியோ, புகைப்படம் என எல்லாம் அழிக்கப்பட்டிருந்தது. இறந்த மாணவி சிறுமி என்பதால் ராமராஜ் மீது போக்சோ மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com