

நாகர்கோவில்,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்ட மக்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகின்றனர்.
முன்னதாக குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மேளதாளங்களுடன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி நரிக்குளம் சந்திப்பில் காலை 8.30 மணிக்கு நடக்கிறது. எனது (தளவாய்சுந்தரம்) தலைமையில் நடைபெறும் இந்த வரவேற்பில் குமரி மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு) மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
எனவே குமரி மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
இதேபோல் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தரும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகளை வரவேற்க குமரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் அனை வரும் திரண்டு வாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.