சென்னை வாக்குச்சாவடிகளை 2-வது நாளாக பார்வையிட்ட போலீஸ் கமிஷனர்

சென்னையில் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார்.
சென்னை வாக்குச்சாவடிகளை 2-வது நாளாக பார்வையிட்ட போலீஸ் கமிஷனர்
Published on

ஏற்கனவே வடசென்னை பகுதியில் வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.நேற்று 2-வது நாளாக மத்திய சென்னை பகுதியில் உள்ள சில வாக்குச்சாவடி மையங்களையும், லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

அவருடன் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சேஷாங்சாய், பகலவன், சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com