போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குழுவினருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மழை வெள்ள மீட்பு பணியில் போலீஸ் குழுவினர் களப்பணியை நேரில் ஆய்வு செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குழுவினருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு
Published on

அப்போது அவர், ஓட்டேரி நல்லா கால்வாயில் அடித்து செல்லப்பட்ட எழுமலை என்பவரை காப்பாற்றிய போலீஸ் மீட்பு குழுவினர், சூளை அஷ்டபுஜம் சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்த வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர், எழும்பூர் பகுதியில் பி.எச்.சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லா தலைமையிலான போலீஸ் குழுவினர், தேனாம்பேட்டை பகுதியில் 70 வயது முதியவரை மீட்ட தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான காவல் குழுவினர், ஓட்டேரி பகுதியில் 15 வயது சிறுவனை மீட்ட ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர், டி.பி. சத்திரம் பகுதியில் மயங்கி கிடந்த மயான ஊழியர் உதயகுமாரை மீட்ட டி.பி. சத்திரம் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினருக்கு நேரில் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com