குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மழையால் அழுகிய நெற்பயிருக்கு நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

மழையால் அழுகிய நெற்பயிருக்கு நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மழையால் அழுகிய நெற்பயிருக்கு நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Published on

கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க...

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் பெட்டியில் போட்ட மனுவில், குளித்தலை தாலுகா, கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகளால் பயிரிடப்பட்ட அனைத்து நிலங்களிலும் உள்ள நெற்பயிர்கள் மழையால் நெற்பயிர்கள் முளைத்து பயிர்முழுவதும் அழுகிய நிலையில் சேதமடைந்து மேற்படி விவசாயிகள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். அதை வேளாண்துறையை சேர்ந்த ஆய்வுகுழு வந்து பார்வையிட்டபடியால் எங்களது சேதத்தையும், நஷ்டத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பட்டா

கரூர் ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நில உச்சவரம்பு திட்டத்தின்கீழ் எங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. அதனால் கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com