கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோரிக்கை.
கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்
Published on

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு மாத காலமாக பெய்த தொடர் மழையின் காரணமாக ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர், 10 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற பெரும் கவலையில் விவசாயிகள் மூழ்கி உள்ளனர். விவசாயம் செய்ய பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்ற கவலை விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அரசு உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு இன்றி பயிரிடப்பட்டிருந்த நிலத்தின் அளவு சிறிதாக இருந்தாலும் அந்த விவசாயிகளையும் கணக்கில் கொண்டு பாதிப்புகள் குறித்தான புள்ளி விவரங்களை சேகரித்து பாரபட்சமின்றி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதில் பாரபட்சம் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com