பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுத்தம், சுகாதாரம் சார்ந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் வட்டார அளவில் நேற்று நடத்தப்பட்டது.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் ஆகியவற்றின் சார்பில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பெண்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுத்தம், சுகாதாரம் சார்ந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் வட்டார அளவில் நேற்று நடத்தப்பட்டது. இதனை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார். நேற்று காலையில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டியும், 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டது. மதியத்திற்கு பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் முதலிடம் பெறுபவர் வருகிற 11-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். இதில் வட்டார கல்வி அதிகாரிகள் ராமதாஸ், செந்தாமரை செல்வி, மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com