மாநில அளவிலான கோ-கோ வீராங்கனைகள் தேர்வுக்கான போட்டி

மாநில அளவிலான கோ-கோ வீராங் கனைகள் தேர்வுக்கான போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான கோ-கோ வீராங்கனைகள் தேர்வுக்கான போட்டி
Published on

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் உடற்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான கோ-கோ வீராங்கனைகள் தேர்வுக்கான போட்டி ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அம்பாள்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தேர்வு போட்டி தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய் வாளர் விஜயன் வர வேற்றார்.

12 பேர் தேர்வு

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 62 கோ-கோ வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு நவம்பர் மாத இறுதியில் பயிற்சி நடைபெறும். அதனையடுத்து டிசம்பர் மாதம் ராஜஸ்தான மாநிலத்தில் நடை பெறும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் இவர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். உடற்கல்வி இயக்குனர்கள் தட்சிணாமூர்த்தி, ஜெயச்சந்திரன், சுதாகர், சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து வீராங் கனைகளை தேர்வு செய்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பராஜ், கண்ணன், தேவப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளியின் முதல்வர் பத்மாவதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com