

பெருந்துறை,
டீசல் விலை உயர்வு மற்றும் ரிக் லாரிகளின் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணி மிகவும் பாதிப்படைந்து உள்ளது. மேலும் ஆழ் குழாய் கிணறு தோண்டும் கட்டணத்தை உயர்த்த முடியாத காரணத்தால் தொழில் நாளுக்கு நாள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ரிக் வண்டி உரிமையாளர்கள் கூறி வந்தார்கள்.
இந்தநிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முதல் ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட ரிக் வண்டி உரிமையாளர்கள் தங்களது ரிக் லாரிகளை பெருந்துறையில் உள்ள கோவை ரோட்டில், சிப்காட் ஏரி கருப்பன் கோவில் அருகே வரிசையாக நிறுத்தியுள்ளார்கள்.