மண்டபம் யூனியன் தலைவர், மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

மண்டபம் யூனியன் தலைவராக வெற்றி பெற்றுள்ள சுப்புலட்சுமி ஜீவானந்தம் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மண்டபம் யூனியன் தலைவர், மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து
Published on

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் 2-வது வார்டில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம். அதனை தொடர்ந்து இவர் உச்சிப்புளி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற யூனியன் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். மொத்தம் 20 கவுன்சிலர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சுப்புலட்சுமி ஜீவானந்தம் 11 வாக்குகளை பெற்று யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு சுப்புலட்சுமி ஜீவானந்தம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.

நடவடிக்கை

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், மண்டபம் தி.மு.க. பிரமுகர் ராஜகோபால், பனைக்குளம் ஊராட்சி கழக செயலாளர் வக்கீல் அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டனர். மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமியின் கணவர் ஜீவானந்தம், தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தற்போது இவர் மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார். மாவட்ட பொறுப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிராமப்புறங்களில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தியும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com