காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கியாஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

கிருஷ்ணகிரி:-

கியாஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட நிர்வாகிகள் தகி, பன்னீர்செல்வம், சரவணகுமார், ஷானவாஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷபிக் அகமத், ராகுல் பேரவை சிவலிங்கம், பாபு, குட்டி, கவியரசன், முபாரக், டேனியல் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒப்பாரி வைத்த பெண்கள்

ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வட்டார தலைவர் சித்திக், மாவட்ட செயலாளர் சக்திவேல், அஜிசுல்லா, ஏழுமலை, ராஜேந்திரன், மீனவர் அணி மாவட்ட தலைவர் செல்வம், நிர்வாகிகள் அக்பர், ஜெயவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ஹஜித் பாஷா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com