அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீது குற்ற நடவடிக்கை கலெக்டர் சந்தீப்நந்தூரி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீதுகுற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீது குற்ற நடவடிக்கை கலெக்டர் சந்தீப்நந்தூரி எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் அகற்றுவது மற்றும் விளம்பர பலகைகள் நிறுவுவது மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது;-

சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின்படி தமிழ்நாடு முழுவதிலும் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதை, சாலைகள் மற்றும் பிற சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலான எந்த விதமான பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகளையும் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் நிறுவக் கூடாது.

இது தொடர்பாக கலெக்டர்கள், துறைத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு நகரம் மற்றும் உள்ளாட்சிகள் விதிகள் 2011-க்கு முரணாக அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் கள், விளம்பர பேனர்கள் நிறுவுவதை தடுக்கும் வகையில் பலன்தரக்கூடிய மற்றும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

அதன்படி சட்ட விதிகளுக்கு முரணாக டிஜிட்டல் பேனர்கள் நிறுவும் நபர்களின் மீது சட்ட விதிமுறைகளை பின்பற்றி குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக காலமுறையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் அவர்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் அனுமதி பெறுவது குறித்து விவரம் தெரிவித்து அனுமதி பெற்று பிரிண்டிங் பிரஸ் முகவரி, தொலைபேசி எண், பேனரின் கீழ் கண்டிப்பாக பிரிண்டிங் செய்ய வேண்டும்.

சாலையோரத்தில் கட்சி விளம்பரங்கள், உயர்நீதிமன்ற உத்தரவுபடி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தடையில்லா சான்றிதழ் பெற்று, 15 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் மனு செய்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பேனர்கள் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர்கள் விஜயா, மணிராஜ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஷேக் முகம்மது, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com