கட்டுமான தொழிலாளர்கள்- ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின கொடியேற்று விழா

மே தினத்தையொட்டி தஞ்சை விளார் சாலையில் உள்ள அன்புநகரில் தென்னகம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் தென்னாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்கள்- ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின கொடியேற்று விழா
Published on

தஞ்சாவூர்,

விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் லதா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில இளைஞரணி தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் ஆனந்தி கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட கவுரவ தலைவர் மாரிமுத்து, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ரமேஷ்குமார், இணை செயலாளர் ஜல்மாபீவி, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் தவறாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விண்ணப்பித்து 3 மாத காலத்திற்குள் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம்

தஞ்சையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் திருஞானம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் சேவையா ஏற்றி வைத்தார். இதேபோல் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மேதின கொடியேற்றுவிழா தஞ்சை நகரம் முழுவதும் நடைபெற்றது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன், கீழவாசல் கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வம், டி.சி.எம்.எப். சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தில் தலைவர் நாராயணசாமி, தமிழ்நாடு அரசுபோக்குவரத்துகழக கரந்தை புறநகர் கிளை முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை, நகரகிளை முன்பு பொருளாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் கொடியை ஏற்றி வைத்தனர்.

நுகர்பொருள் வாணிப கழகம்

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு துணைத்தலைவர் பாலையன், ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செந்தில்நாதன், கார்த்திக் ஆகியோர் தலைமையில் கீழராஜவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி, புதிய வீட்டுவசதிவாரியம், முனிசிபல் காலனி, இ.பி.காலனி உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், தெருவோர வியாபாரிகள் சங்கசெயலாளர் முத்துகுமரன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் பிருத்வி, கமலஹாசன், போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் பீர்தம்பி, தாமரைசெல்வன், சீனிவாசதினேஷ், கட்டுமான சங்க நிர்வாகிகள் வியாகுலமேரி, சிகப்பியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கம்யூனிஸ்டு கட்சி

இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகு.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர் தாஜூதீன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் ரபீக்அகமது, அலெக்ஸ் பிரிட்டோ, வெங்கடேஷ், ஹாஜாமொய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com