

சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து இரு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.