

பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையில் இருந்து பிரிக்கப்படும் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 154 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 91.37 அடியாக இருந்தது. அதாவது ஒரேநாளில் 1 அடி உயர்ந் தது. இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.