ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
Published on

சென்னை,

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், 2வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 800 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான 3வது யூனிட் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கவேண்டும். குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு ரூ.600 வீதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வடசென்னை அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சங்கங்களின் மத்திய அமைப்பினர், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com