பேட்டரி வண்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் பேட்டரி வண்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பேட்டரி வண்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் பேட்டரி வண்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கோமேதகம் வரவேற்றார். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெ.முருகேசன், டி.விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தனர்.

பொதுமக்கள் கைகளை தினமும் 15 முறை கழுவ வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், யாருக்காவது சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பூபாலன், தொட்டாவம்மாள், மண்டல துணை தாசில்தார்கள், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com