எமதர்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு

வேடசந்தூர் அருகே எமதர்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
எமதர்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு ச.புதூரில் போலீஸ் நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.

இந்த பிரசாரத்திற்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமை தாங்கினார்.

தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அய்யலூர் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்கத்தின் சார்பில் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்ட நடிகர்கள் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை நடித்து காட்டினார்.

அப்போது பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். தடுப்பூசி போடவேண்டும்.

ஊரடங்கின்போது வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வெளியே சென்று விட்டு வந்தால் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைளை வலியுறுத்தினர்.

இதனை சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com